சிறை கைதி தப்பி தப்பியோட்டம்! தேடும் பணி தீவிரம்:
[2025-03-23 11:44:06] Views:[75] வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் நேற்று (22) தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபரே இவ்வாறு தப்பி சென்றுள்ளார்.
இந்நிலையில், தப்பி சென்ற குறித்த சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை வவுனியா சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.