யாழில் இன்றும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை கேரள கஞ்சா!
[2025-03-23 17:05:34] Views:[102] நேற்றைய தினம் (22) இராணுவத்தினர் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்பளை பகுதியில் 319 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றிய நிலையில், இன்று (23) காலை ஆழியவளை பகுதியில் 84 கிலோ கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, ஆழியவளை, கொடுக்குளாய் பகுதியில் இன்று (23) காலை 84 கிலோ கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மருதங்கேணி பொலிசாரும் இணைந்து சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது ஆழியவளை, கொடுக்குளாய் கடற்கரைக்கு அண்மித்த பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் 40 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 84 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.
சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, நேற்றைய தினம் இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்பளை, மூர்ககம் கடற்கரைக்கரைக்கு அண்மித்த பகுதியில் இருந்து 319 கிலோ கஞ்சா மற்றும் படகு, அதற்கான வெளியிணைப்பு இயந்திரம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.