yarlathirady.com

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு இளைஞர்கள் கைது!

[2025-03-23 17:43:08] Views:[16]

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் இரண்டு இளைஞர்கள் ஹெரோயின் போதைப்பொருளுடன் இன்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ். மாவட்ட பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் 22 மற்றும் 23 வயதுடையவர்கள் எனவும், அவர்களிடம் இருந்து 805 மில்லிக்கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் இருவரையும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


சினிமாசெய்திகள்
குட் பேட் அக்லி
2025-04-10 19:52:04
சிறந்து விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அடுத்த பைனலிஸ்ட் இவர் தானா - சரிகமப சீசன் 4
2025-04-09 11:41:31
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள திவினேஷ் தான் 4 வது இறுதி போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஹ்மான் இசையில் ராம் சரண் நடிப்பில் பெத்தி படம்...
2025-04-06 15:12:52
புச்சி பாபு இயக்க இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்கள்.
நடிகர் அஜித் வாங்கிய சம்பளம்
2025-04-06 14:59:21
குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக நடிக்க அஜித் ரூ. 163 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாஸ் லுக்கில் அஜித் - குட் பேட் அக்லி
2025-04-04 12:13:24
இப்படத்தின் டீசர் சென்ற மாதம் வெளிவந்து பட்டையை கிளப்பியது.
பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா காலமானார்..!
2025-03-26 09:18:24
பாரதி ராஜா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான 48 வயதான மனோஜ் பாரதிராஜா இதய அறுவைசிகிச்சை செய்து ஓய்வில் இருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.