இலங்கையில் நிறுத்தப்படும் எலன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் சேவை..!
[2025-03-25 11:18:26] Views:[182] இலங்கையில் எலோன் மஸ்க்கின் 'Starlink' செய்மதி இணைய சேவையின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தேசிய பாதுகாப்பு விடயங்கள் உட்பட, அரச நிறுவனங்களின் தொடர்புத் தகவல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பணிகள் முடியும் வரை இந்நிலை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில தனிநபர்கள் இந்த செயற்கைக்கோள் இணைய சேவையை சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
இது தொடர்பாக, பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை திணைக்களம், ஸ்டார்லிங்குடன் மேலும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.