யாழில் இரவோடு இரவாக கைப்பற்றப்பட்ட பெருந்தொகை கேரள கஞ்சா.!!
[2025-03-27 12:19:21] Views:[160] யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியில் வைத்து இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட பெருந்தொகை கேரள கஞ்சா இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வுத் துறையிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிகண்டி பகுதியில் வல்வெட்டித்துறை பொலிஸாருடன் இணைந்து சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது 33 கஞ்சா பொதிகளில் இருந்த சுமார் 70 கிலோ எடை கொண்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 13.5 மில்லியன் ரூபாய் எனவும், அவற்றை சட்ட நடவடிக்கைகளுக்காக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.