தபால் மூல வாக்களிப்பிற்கான திகதிகள் அறிவிப்பு...!!
[2025-03-27 15:49:19] Views:[177] எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 22, 23, 24 மற்றும்28,29 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L. ரத்னாயக்க இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான தேர்தல் மே மாதம் 06 ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த மூன்று பிரதேச சபை தேர்தலுக்கான வேட்பு மனு கையளிப்பு இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது .