க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியாகும்..!!
[2025-03-28 09:43:11] Views:[129] க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடுவதற்கு பரீட்சைத் திணைக்களம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பான பணிகள் அனைத்தும் இறுதிகட்டத்தில் இருப்பதாக பரீட்சைத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பமான உயர்தரப் பரீட்சை டிசம்பர் 20 ஆம் தேதி முடிவடைய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சீரற்ற வானிலை காரணமாக பிற்போடப்பட்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை பரீட்சை நடத்தப்பட்டது.
இந்த பரீட்ச்சைக்கு,பாடசாலை பரீட்சார்த்திகள் 253, 380 பேரும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 79, 795 பேரும் மொத்தமாக 333,183 பேர் தோற்றியிருந்தனர்.
இந்நிலையில், க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் வெளியிடுவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளன.