பாம்பன் பாலம் திறக்கப்படும் திகதி தோடர்பான அறிவிப்பு..!!
[2025-03-28 11:13:23] Views:[286] இந்தியாவில் மிக பிரமாண்டமா கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலம் திறக்கப்படவுள்ள திகதி தொடர்பாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் ஆறாம் திகதி ராமநவமியன்று பாலம் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் பிரதமர் மோடிபங்கேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் தொடருந்து தூக்குப் பாலத்தில் அடிக்கடி ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகள் மற்றும் விரிசல் காரணமாக, பாலத்தின் அருகிலேயே 2019 மார்ச் முதலாம் திகதி புதிய தொடருந்து பாலத்தின் அடிக்கல்லை காணொலி வாயிலாக பிரதமர் மோடி நாட்டினார். இப்பாலத்தின் கட்டுமான பணிகளுக்காக 535 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது கட்டுமான பணிகள், நிறைவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் ஏப்ரல் ஆறாம் திகதி பிரதமர் மோடி தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.