செங்கடலில் 44 பயணிகளுடன் கடலில் மூழ்கிய கப்பல்..!
[2025-03-28 11:42:07] Views:[150] இன்று காலை எகிப்து-செங்கடல் பகுதியில் சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பலொன்று கடலில் மூழ்கியதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நீர்மூழ்கி கப்பல் பல நாடுகளை சேர்ந்த 44 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த "சிந்துபாத்" என்ற நீர்மூழ்கி கப்பலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த நீர்மூழ்கிக் கப்பல், பவளப்பாறைகளைப் பார்ப்பதற்காக வழக்கமான சுற்றுப்பயணத்தில் ஈடுபட்ட நிலையிலேயே இந்த விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுமார் 44 பயணிகள் குறித்த கப்பலில் இருந்துள்ளதுடன் அதில் 06 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் சுமார் 09 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் பலரின் நிலை மோசமானதாக காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.