ஆனையிறவு உப்பு தொழிற்சாலை செயற்பாடுகள் நேற்று முதல் மீள ஆரம்பம்.
[2025-03-30 09:27:24] Views:[191] வடக்கு மாகாணத்தின் மிகப்பெரிய உப்பளமான ஆனையிறவு உப்பு தொழிற்சாலை நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.
இந்த தொழிற்சாலை மூலம் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 5 மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுவதாக தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர் கயான் வெல்லால தெரிவித்துள்ளார்.
1937 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஆனையிறவு உப்பளத்தில் 1938 ஆம் ஆண்டில் உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் ஏறத்தாழ ஒன்பது தசாப்த பாரம்பரியம் மிக்க ஆனையிறவு உப்பளத்தின் செயற்பாடுகள் நேற்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.