உப்புத் தண்ணீரில் கரையும் பிளாஸ்டிக் - ஜப்பான் விஞ்ஞானிகள்
[2025-03-31 12:11:31] Views:[48] சுற்றுச் சூழல் மாசுவை தடுப்பதற்காக உப்புத் தண்ணீரில் உடனடியாக கரையும் புதிய பிளாஸ்டிக்கை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மக்கள் பொருட்களை எடுத்துச் செல்ல பிளாஸ்டிக் பைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த பிளாஸ்டிக் நீண்ட காலம் மக்காமல் இருப்பதால், இது சுற்றுச்சூழலுக்கும், வனவிலங்குக்கும் மற்றும் மனிதர்களுக்கும் கேடு விளைவிக்கிறது.இப்பிரச்சினையை தீர்க்க ஜப்பானில் உள்ள விஞ்ஞானிகள் புதிய வகை பிளாஸ்டிக்கை உருவாக்கியுள்ளதாகவும் இதை பயன்படுத்தும்போது உறுதியாக இருக்கும். உப்புத் தண்ணீரில் போட்டவுடன் கரைந்து விடும். தண்ணீரில் கரைந்ததும், அது தீங்கற்ற பொருட்களாக மாறி சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் எனவும் கூறப்படுகிறது.