யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை - விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதை
[2025-04-01 16:05:04] Views:[182] யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி இரண்டாம் வருட சிரேஷ்ட மாணவர்களுக்கு உடனடியாகச் செயற்படும் வகையில் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் நிறுவனமயப்படுத்தப்பட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் தெரிவித்துள்ளார்.