yarlathirady.com

4 நாட்களுக்கு பின் மியான்மர் நிலநடுக்கத்தில் உயிருடன் மீட்கப்பட்ட மூதாட்டி

[2025-04-02 14:28:23] Views:[44]

மியான்மர் நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி ஒருவர் 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிய வருகிறது. கடந்த 28 ஆம் திகதி மியான்மர் நாட்டில் மதியம் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நிலநடுக்கம் நகரின் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளை அடியோடு சாய்த்தது. விமான நிலையம், சாலைகள் பாதிக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான வீடுகள் உருக்குலைந்தன.


தலைநகர் நேபிடாவ் மற்றும் மண்டலே நகரங்களில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்துள்ளதாக உலக சுகாதார மையம் அறிவித்து உள்ளது. பல நாடுகளின் உதவியுடன் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று தலைநகர் நேபிடாவில் 63 வயது மூதாட்டி ஒருவரை, மீட்பு குழுவினர் 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்டனர்.


அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளை மீட்பு குழுவினர் இன்னும் சென்றடையவில்லை என்று கூறப்படுகிறது.மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,719 ஆக உயர்ந்துள்ளதுடன் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 4,500 பேர் காயமடைந்துள்ளதாகவும், இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சினிமாசெய்திகள்
மாஸ் லுக்கில் அஜித் - குட் பேட் அக்லி
2025-04-04 12:13:24
இப்படத்தின் டீசர் சென்ற மாதம் வெளிவந்து பட்டையை கிளப்பியது.
பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா காலமானார்..!
2025-03-26 09:18:24
பாரதி ராஜா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான 48 வயதான மனோஜ் பாரதிராஜா இதய அறுவைசிகிச்சை செய்து ஓய்வில் இருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் விறுவிறுப்பாக படமாக்கப்படும் பராசக்தி..!!
2025-03-13 14:33:09
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் நடிக்கும் "பராசக்தி" திரைப்படம் தற்போது இலங்கையில் படமாக்கப்பட்டு வருகிறது.
மர்மர் திரைப்படம்
2025-03-10 12:20:48
ரசிகர்களின் பேராதரவை பார்த்து தற்போது 330 திரையரங்கில் திரையிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
உடல்நலக் குறைவு காரணமாக பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் வைத்தியசாலையில் அனுமதி
2025-03-01 11:55:11
அவர் தற்போது நலமோடு இருப்பதாகவும் சிகிச்சை நிறைவடைந்த பின்னர் வீடு திரும்பவுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.