7 இலட்சம் பேர் தபால் மூல வாக்களிப்பிற்காக விண்ணப்பம்
[2025-04-03 10:50:16] Views:[133] உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சுமார் 700,000 தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதியுள்ள நபர்களிடமிருந்து மார்ச் 3 ஆம் திகதி முதல்17 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகளுக்கான அரச அதிகாரிகள் குறித்த தகவல் கணக்கெடுப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.