அதிகாலை பாகிஸ்தானில் நிலநடுக்கம்
[2025-04-03 19:16:31] Views:[46] பாகிஸ்தானில் அதிகாலை 2.58 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பலுசிஸ்தானின் கிழக்கு - தென்கிழக்கே 65 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆப்கானிஸ்தான், திபெத்திலும் நில அதிர்வுகள் உணரப்பட்டது.