15 கிலோ கஞ்சாவுடன் வவுனியாவில் வைத்து மூவர் கைது!
[2025-04-04 10:33:30] Views:[130] வவுனியாவில் 15 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வவுனியா, கணேசபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 15 கிலோ கஞ்சா கண்டு பிடிக்கப்பட்டது. அதனை உடமையில் வைத்திருந்த 25-32 வயதிற்குட்பட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.