yarlathirady.com

பிரதமர் மோடி இலங்கையிலிருந்து புறப்பட்டார்...

[2025-04-06 12:50:16] Views:[162]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துகொண்டு சற்று நேரத்திற்கு முன்னதாக நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். தமிழகம் நோக்கிப் புறப்பட்டுச் சென்ற இந்தியப் பிரதமர் தமிழகத்தின் ராமநாதபுர மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் தொடருந்து பாலத்தை இன்று (06) திறந்து வைக்கவுள்ளார்.


பாம்பன் தொடருந்து பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்த நிலையில், இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். இந்த நிலையில் தனது இலங்கை விஜயம் தொடர்பில் இந்திய பிரதமர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.


அப்பதிவில்"எனது வருகையின் போது அளித்த அன்பிற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மக்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொழும்பாக இருந்தாலும் சரி, அநுராதபுரமாக இருந்தாலும் சரி, இந்தப் பயணம் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான கலாச்சார, ஆன்மீக மற்றும் நாகரிக உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இது நமது இருதரப்பு உறவுகளுக்கு நிச்சயமாக உத்வேகத்தை அளிக்கும்." என இந்திய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.


சினிமாசெய்திகள்
3BHK திரைப்படம்
2025-07-06 11:25:00
இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
குபேரா திரைப்பட திரைவிமர்சனம்...
2025-06-22 11:03:19
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள குபேரா திரைப்பட திரைவிமர்சனம்.
ஜாக்கி சானுடன் நடிக்கும் சிம்பு.! விரைவில் அறிவிப்பு:
2025-05-29 20:42:27
ஆக்ஷனில் பல சாதனைகளை படைத்த நடிகர் ஜாக்கி சான் உடன் இணைந்து சிம்பு நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.