வீடு ஒன்றில் தீ - பெறுமதியான பொருட்கள் நாசம்
[2025-04-08 10:53:14] Views:[182] நேற்றையதினம் (07) மாலை கல்முனை ,கல்முனைக்குடி 12 பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.
திடீரென ஏற்பட்ட தீ காரணமாக வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து அபாய உதவி கோரினர். இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட இளைஞர்கள் தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.