புத்தாண்டு - ச.தொ.ச விற்பனை நிலையங்களில் புதிய திட்டம் அறிமுகம்
[2025-04-08 11:40:58] Views:[203] எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டு காலத்தில் ஏற்படக்கூடிய மீன் தட்டுப்பாட்டை குறைப்பதற்கு புதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. நியாயமான விலையில் புதிய மீன்கள் விற்பனை செய்யும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் 300 மற்றும் 400 கிராம் பொதிகள் நியாயமான விலையில் விநியோகிக்கப்படவுள்ளன. தெரிவு செய்யப்பட்ட 21 ச.தொ.ச விற்பனை நிலையங்களில் ஆரம்பகட்டமாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.