இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு
[2025-04-09 11:06:07] Views:[131] இன்று(09) நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
தென் மாகாணத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் நாட்டின் பிற பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.மேற்கு மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.
தெற்கு, மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 75 மி.மீ. வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளைகளில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படலாம். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் தயவுசெய்து கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.