மக்கள் மகிழ்ச்சியில் - யாழ்.பலாலி ஊடாக கே.கே.எஸ் வரை செல்லும் பேருந்து
[2025-04-10 19:25:51] Views:[205] இன்றைய தினம் (10) யாழ்ப்பாணம் பலாலி வீதி திறக்கப்பட்டதை அடுத்து, காங்கேசன்துறை - பலாலி யாழ்ப்பாணம் வழித்தட பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக தனியார் பேருந்து சேவையின் முன்னாள் தலைவர் அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
தற்போது பாதை முழுமையாக திறக்கப்பட்டுள்ளமையால் , இனிவரும் காலங்களில் யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் 764 ஆம் இலக்க வழித்தட பேருந்துகள் பலாலி வீதியூடாக பருத்தித்துறை - பொன்னாலை வீதியை சென்றடைந்து , அதனூடாக காங்கேசன்துறை சந்தி வரையில் சேவையில் ஈடுபடும் எனவும் கூறப்படுகின்றது.