இடியுடன் கூடிய மழை எதிர்பார்ப்பு!
[2025-04-12 19:39:36] Views:[71] தெற்கு, மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் நாளை (13) மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென் மற்றும் மேல் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளிலும், யாழ்ப்பாணம், புத்தளம், மன்னார் மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 5 முதல் 14 வரை இலங்கையைச் சுற்றியுள்ள அட்சரேகைகளில் சூரியன் வடக்கு நோக்கிப் புலப்படும்போது வெப்பநிலை உச்சத்தை அடையும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளை மதியம் 12:11 மணிக்கு துணுக்காய், ஒலுமடு, ஒட்டுசுட்டான், குமுளமுனை மற்றும் செம்மலை பகுதிகளில் வெப்பநிலை உச்சத்தை அடையும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.