16 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம்! விளையாட்டு பயிற்றுவிப்பாளர் கைது;
[2025-04-14 12:19:28] Views:[131] 16 சிறுவர்களை பாயில் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவரே இவ்வாறு நேற்று (13) பகல் கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி பொலீஸார் தெரிவித்தனர்.
குறித்த பயிற்றுவிப்பாளர் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில் அவர் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில் சந்தேக நபர் கிளிநொச்சி அறிவியல் நபர் பகுதியில் இருப்பதாக பொலீஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக, கிளிநொச்சி குற்றத்தடுப்பு பொலீஸார் அவரை வைத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலீஸார் தெரிவித்துள்ளனர்.