A6 வீதியில் கோர விபத்து இருவர் பலி!!
[2025-04-16 11:32:04] Views:[93] குருநாகல் - தம்புள்ள A6 வீதியில் தொரடியாவ பகுதியில் இன்று (16) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தம்புள்ளையில் இருந்து குருநாகல் நோக்கிச் பயணித்த கெப் வண்டி எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து நிகழ்த்துள்ளது. இதன் போது மோட்டார் சைக்கிள் ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளது.
முச்சக்கர வண்டியின் சாரதி, இரண்டு பயணிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதி ஆசியோர் காயமடைந்த நிலையில் குருநாகல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சம்பவத்தில் கல்கிரியாகம பகுதியைச் சேர்ந்த 37 மற்றும் 43 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி மற்றும் பயணி ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும், சடலங்கள் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக கெப் வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் விபத்து நடந்த நேரத்தில் மதுபோதையில் இருந்தமை முதற்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.