15 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!
[2025-04-17 15:34:27] Views:[68] கிளிநொச்சி, புளியம்பொக்கனை பகுதியில் இராணுவ புலனாய்வுப் பிரிவு, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் சுமார் 150 இலச்சம் ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சா பொட்டலங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (16) மாலை இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து புளியம்பொக்கனை, தர்மபுரம் பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 15 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 85 கிலோகிராம் (40 பொட்டலம்) கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம், உடுவில் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், போதைப்பொருள் கடத்தலுக்காக சிறப்பாக மாற்றியமைக்கப்பட்ட பட்டாரக வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டன.
மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.