யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!!
[2025-04-17 17:21:17] Views:[63] யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இரு இளைஞர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலணை சாட்டி கடற்கரை பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர்கள் தங்கியுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் 20 மற்றும் 30 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் புதன்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை இருவரையும் எதிர்வரும் 2025.04.22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.