உயிர்த்த ஞாயிற்று: தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு!
[2025-04-18 13:11:30] Views:[104] உயிர்த்த ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு மத அனுஷ்டானங்களை நடத்தும் தேவாலயங்களுக்கு பொலிஸ், சிறப்பு அதிரடிப்படை மற்றும் முப்படையினரையும் உள்ளடக்கிய விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
தவக்காலத்தின் இறுதிப்பகுதியான புனித வழிபாடுகள் நேற்று ஆம்பமாகின இன்று (18) மாலை பெரிய வெள்ளிக்கிழமை வழிபாடுகளும், ஞாயிற்றுக்கிழமை (20) உயிர்த்த ஞாயிற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன.
இவற்றை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பிற்காக சிறப்பு பாதுகாப்பை செயல்படுத்துமாறு பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிவுறுத்தியுள்ளார்.
இந்த காலகட்டத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் தேவாலயங்களை அடையாளம் கண்டு, அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அவர் காவல்துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொலிஸார், சிறப்பு அதிரடிப்படை மற்றும் முப்படையினரையும் உள்ளடக்கிய விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.