கொங்கோ நாட்டின் படகொன்றில் தீ பற்றியதில் பலர் பலி...!!
[2025-04-18 21:35:28] Views:[111] வடமேற்கு கொங்கோவில் படகொன்று தீப்பிடித்து கவிழ்ந்ததில் 50 பேர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போனதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
வடமேற்கு கொங்கோவில் உள்ள மடான் குமு துறைமுகத்தில் இருந்து போலோம்பா பகுதிக்கு ஒரு மோட்டார் படகில் 400க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டுள்ளனர். படகு பன்டாக்கா பகுதியில் சென்று கொண்டிருந்த போது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
படகில் பயணம் செய்தவர்கள் தீ விபத்தில் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்துள்ளனர். இந்த விபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 50 பேர் உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி 100க்கும் மேற்பட்டவர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.