டெல்லியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் பலி..!
[2025-04-19 20:05:22] Views:[116] இந்திய நாட்டின் தலைநகரான டெல்லியின் வடகிழக்கில் உள்ள முஸ்தபாத் நகரில் இன்றையதினம் நான்கு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கட்டிடம் இடிந்து விழுந்த நிலையில், தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு வீரர்கள் மற்றும்பொலிஸ் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கிய 14 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும் அதில் நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மேலும் 12 பேர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.