யாழில் ஆபத்தான பொருளை உடைமையில் வைத்திருந்த இரு இளைஞர்கள் கைது..!
[2025-04-23 21:50:50] Views:[92] அராலி வீதி, பொம்மைவெளி பகுதியில் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்போது அவர்களிடமிருந்து 620 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதன பின் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.