பாரியளவு வீழ்ச்சியடைந்த முட்டையின் விலை!
[2025-04-23 22:16:10] Views:[119] தற்போது முட்டைக்கான கேள்வி குறைவடைந்துள்ளமையின் காரணமாக முட்டை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, முட்டை ஒன்று 23 ரூபாய் முதல் 29 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் புத்தாண்டு காலத்தில் முட்டை ஒன்று 47 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.