மஹிந்த - சந்தோஷ் ஜா இடையே தீடீர் சந்திப்பு!
[2025-04-24 09:32:56] Views:[107] இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் (22) மாலை கொழும்பு, விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
இதன்போது அவர்கள் ஒரு சுமூகமான உரையாடலில் ஈடுபட்டதாகவும், அரசியல் மற்றும் தனிப்பட்ட கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதியுடன் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசமும் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.