வடக்கு மாகாணத்தில் 114 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு!
[2025-04-24 10:22:46] Views:[89] உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் இதுவரை 114 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறித்த மாவட்டங்களினது தேர்தல் திணைக்கள பொருப்பதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 52 தேர்தல் முறைப்பாடுகளும், வவுனியா மாவட்டத்தில் 26 தேர்தல் முறைப்பாடுகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 15 தேர்தல் முறைப்பாடுகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 11 தேர்தல் முறைப்பாடுகளும், மன்னார் மாவட்டத்தில் 10 தேர்தல் முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிற.