இலங்கை குறும் படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்..!
[2025-04-24 12:15:23] Views:[139] அவுஸ்திரேலியா நாட்டில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட போட்டியில் 28 நாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட திரைப்படங்களில் மன்னாரைச் சேர்ந்த இளைஞன் கவிவர்மன் 2025 ஆம் ஆண்டிற்கான "சிறந்த இயக்குனர்" எனும் சர்வதேச விருதை பெற்றுள்ளார்.
கடந்த வருடம் ‘மடமை தகர்’ திரைப்படம் வெளியாகி உள்ளூர் ரீதியாக பல்வேறு பாராட்டுக்களை பெற்றிருந்த நிலையில் தற்போது சர்வதேச ரீதியாகவும் சிறந்த அங்கிகாரத்தை பெற்றுள்ளது.
தற்கொலை எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது எனும் கதை கருவை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட குறித்த திரைப்படம் கடந்த வருடம் மன்னார் சன் சினிமா திரையரங்கில் வெளியிடப்பட்டிருந்தது.
விமர்சன ரீதியாக பல்வேறு தரப்பட்ட மக்களின் பாராட்டுகளை குறும்படம் பெற்ற நிலையில் Salt House Creative International Film Festival நடாத்திய போட்டியில் சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்று நம் நாட்டிட்கு பெருமை சேர்த்துள்ளார்.