தேர்தல் விதி மீறிய பெண் வேட்பாளர் கைது!
[2025-04-24 15:58:25] Views:[93] தேர்தல் சட்டங்களை மீறிய உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம், தில்லடி பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய பெண் வேட்பாளர் ஒருவரே இவ்வாறு நேற்றையதினம் (23) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆதரவாளர்களின் உதவியுடன் தேர்தல் சட்டங்களை மீறி தேர்தல் துண்டுப்பிரசுரங்களை வீடு வீடாக சென்று பகிர்ந்தார் என அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் வேட்பாளரிடமிருந்து 86 தேர்தல் துண்டுப்பிரசுரங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.