வாட்ஸ் அப் அறிமுகப்படுத்திய தடாலடியான புதிய வசதி.
[2025-04-25 09:46:37] Views:[130] வாட்ஸ் அப் பயனாளர்களின் உரையாடல்களை உயர்மட்ட அளவில் பாதுகாப்பதற்கு புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட செயலியான வாட்ஸ்அப், தற்போது அபரிமிதமான வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப் செயலியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் வாட்ஸ் அப் பயனர்களுக்காக அவ்வப்போது புதிய அப்டேட்களை வெளியிட்டு வரும் மெட்டா நிறுவனம், தற்போது பயனர்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களுக்கு மேலதிக பாதுகாப்பை வழங்கும் நோக்கில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில், Advanced Chat Privacy எனப்படும் மேம்பட்ட உரையாடல் தனியுரிமையை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது. இதைபால் வாட்ஸ் அப் பயனாளர்களின் உரையாடல்கள் உயர்மட்ட அளவில் பாதுகாக்கப்படும் என்பது குறிப்பிட தக்கது.