இன்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 28 பேர் காயம்..!
[2025-04-25 11:36:31] Views:[111] பதுளை, மஹியங்கனை, திஸ்ஸபுர பிரதேசத்தில்இன்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 28 பேர் காயமடைந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
பேருந்தில் ஏற்பட்ட தொழினுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் போது 10 பாடசாலை மாணவர்கள் உட்பட 28 பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.