கிளாலியில் பற்றை காணியிலிருந்து பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு!!
[2025-04-25 12:01:26] Views:[135] யாழ்ப்பாணம், கிளாலி பகுதியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பளை பொலிஸார் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது சுமார் 08 இலச்சம் ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பளை பொலிஸாருடன் இணைந்து குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது எழுதுமட்டுவாழ், மாணிக்கவாசகர் கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள பற்றை காணி ஒன்றிலிருந்து 4 கிலோ 500 கிராம் (2 பொட்டலம்) கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சம்பவம் கொர்பில் மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.