சமூக பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு;
[2025-04-25 12:44:22] Views:[107] யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்ட நடைமுறைப்படுத்தலை சிறப்பாக மேற்கொண்ட உத்தியோகத்தர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு நேற்றைய தினம் (24) யாழ்ப்பாணம் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாவட்ட இணைப்பாளர் த. சங்கர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்ட நடைமுறைப்படுத்தலில் 2024ஆம் ஆண்டு தேசிய ரீதியில் பண சேகரிப்பு அடிப்படையில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பருத்தித்தறை, நல்லூர், சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலகங்கள் பெற்றிருந்ததுடன்,
அங்கத்தவர்கள் இணைப்பு அடிப்படையில் தேசிய விருதிற்கு நல்லூர், பருத்தித்துறை மற்றும் கோப்பாய் ஆகிய பிரதேச செயலகங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன.
ஓய்வூதியத் திட்ட நடைமுறைப்படுத்தலில் அகில இலங்கை ரீதியில் இம் முறை யாழ்ப்பாண மாவட்டம் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.