யாழ். போதனாவில் வைத்தியரின் பணத்தை திருடியவர் கைது!
[2025-04-26 11:26:45] Views:[133] யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்தியர் வரின் ஆயிரம் பிராங் பணத்தினை திருடிய குற்றச்சாட்டில் வைத்தியசாலை பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவரின் உடைமையில் இருந்த பணம் காணாமல் போனமை தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்படு செய்யப்பட்டதை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வைத்தியசாலை பணியாளர் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தனர்,
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது சந்தேகநபர் பிணையில் செல்ல மன்று அனுமதித்தது.
அதேவேளை, யாழ். போதனா வைத்திசாலையில் தொலைபேசிகள், பணம் என்பவை களவு போகும் சந்தர்ப்பங்கள் காணப்படும் நிலையில், வைத்தியசாலைக்கு வருவோர் பெறுமதியான உடமைகளை தம்முடன் எடுத்து வர வேண்டாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் பொதுமக்களை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.