யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: அதிகரித்துள்ள நோய்த்தாக்கம்..!
[2025-04-26 21:57:57] Views:[94] யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நால்வருக்கு சிக்கன்குனியா உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை நால்வர் சிக்கன்குனியா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நால்வருக்கு சிக்கன்குனியா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த விடயம் தொடர்பில் கூடுதலான அவதானத்தைச் செலுத்தியுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.