உயர் பாதுகாப்பு சிறையில் இருக்கும் ஹரக் கட்டாவிடமிருந்து கையடக்கத் தொலைபேசி மீட்பு!
[2025-04-27 12:22:03] Views:[128] தங்காலை பழைய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப் பொருள் வர்த்தகரான ஹரக் கட்டாவிடம் இருந்து கையடக்கத் தொலைபேசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நீண்ட காலமாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைக்குள் இருந்த ஹரக் கட்டா எனப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன இப்போது பயங்கரவாத தடுப்புப் பிரிவின் கண்காணிப்பின் கீழ் தங்காலை பழைய சிறைச்சாலையில் பலத்த பாதுகாப்புடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் உயர் பாதுகாப்பு சிறையில் இருக்கும் அவரிடமிருந்து கையடக்கத் தொலைபேசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்தகையடக்கத் தொலைபேசி அவருக்கு எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து பல கோணங்களில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.