14 வயது சிறுமி துஷ்பிரயோகம்! மூவர் கைது;
[2025-04-27 13:21:33] Views:[125] யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் அந்தரங்க வீடியோ உள்ளதாக மிரட்டி அவர் நீண்ட காலமாக இவ்வாறு தகாத நடத்தைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபர்கள் மூவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது அவர்களை 14 நாற்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பொலிஸார் மேலதிக விசரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.