தாய்லாந்தில் விமானம் கடலில் விழுந்து விபத்து- ஐவர் பலி...!!
[2025-04-27 22:12:09] Views:[124] தாய்லாந்தில் விமானமொன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் அந்நாட்டை சேர்ந்த ஐந்து பொலிஸ் அதிகாரிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
காலநிலையை அவதானிப்பதற்காக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்து நொருங்கி விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானம் புறப்பட்டு ஒருசில நிமிடங்களில் வெடிப்பு போன்ற சத்தம் அதன் இயந்திரத்திலிருந்து வந்தது எனவும் விமானி விமானத்தை விமானநிலையத்தில் தரையிறங்குவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரையிலிருந்து 100 மீற்றர் தொலைவில் விமானத்தின் சிதைவுகள் காணப்படுகின்றன,விமானம் இரண்டாக உடைந்துள்ளது. விமானத்தில் பயணித்த ஆறு பொலிஸ் அதிகாரிகளில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்து சிகிசிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.