பலாலி வீதி திறப்பு; முதலாம் திகதி காங்கேசன்துறை வரை சிற்றூர்திகள் சேவை ஆரம்பம்!
[2025-04-28 12:42:16] Views:[113] எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து 764 வழித்தட சிற்றூர்திகள் யாழ்ப்பாணத்திலிருந்து பலாலி வீதியூடாக காங்கேசன்துறை வரையில் சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
764 வழித்தட சிற்றூர்த்திகள் (மினிபஸ்கள்) யாழ்ப்பாணத்திலிருந்து பலாலி வீதியூடாக காங்கேசன்துறை வரையும், 769 வழித்தட சிற்றூர்திகள் யாழிலிருந்து காங்கேசன்துறை வீதியூடாக காங்கேசன்துறை வரையிலும் எதிர்வரும் மே மாதம் 1 ஆம் திகதி முதல் சேவையில் ஈடுபடவுள்ளன.
வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.மகேஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த ஊடாக அறிக் கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த 10 ஆம் திகதி பலாலி வீதி திறக்கப்பட்ட நிலையில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு அமைவாக இந்த நடவடிக்கை முன்னேடுக்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.