யாழ்ப்பாணத்திற்கு பெறுமதியான மரக்கட்டைகளை கடத்திய சந்தேகநபர் கைது..!
[2025-04-28 19:26:46] Views:[117] நேற்றையதினம் புதுக்குடியிருப்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி கடத்தி வரப்பட்ட ஒரு தொகை மரக்குற்றிகளை தருமபுரம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து A-35 பிரதான வீதியினூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சிறிய ரக பாரவூர்தி ஒன்றில் மரக்கடத்தல் இடம்பெறுவதாக தருமபுரம் பொலிஸாருக்கு இரகசிய தகவலொன்று கிடைக்கப்பெறுள்ளது.
அதற்கு அமைவாக தருமபுரம் பொலிஸார் நேற்றையதினம் வீதி சோதனையை மேற்கொண்டபோது பெறுமதிமிக்க 12 முதிரை மரக்குற்றிகளுடன் சிறிய ரக பாரவூர்தியின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் அவரை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தருமபுரம் போலீசார் தெரிவித்துள்ளனர் .