யாழில் மின்னல் அனர்த்தம் காரணமாக 19 பேர் பாதிப்பு..!
[2025-04-29 09:45:55] Views:[104] யாழில் ஏற்பட்ட மின்னல் அனர்த்தம் காரணமாக இதுவரை 6 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளுடன் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், உடுவில் பிரதே செயலர் பிரிவிற்குட்பட்ட j/208 கிராம சேவகர் பிரிவில் இரு குடும்பத்தை சேர்ந்த ஏழுபேரும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட j/279 கிராம சேவகர் பிரிவில் 1 குடும்பத்தை சேர்ந்த 5பேரும், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட j/301 கிராம சேவகர் பிரிவில் 2 குடும்பங்களை சேர்ந்த 3பேரும் மற்றும் மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட j/426 கிராம சேவகர் 1 குடும்பத்தை சேர்ந்த 4பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.