இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட 500 கிலோ மஞ்சளுடன் ஒருவர் கைது..!
[2025-04-30 09:43:51] Views:[113] நேற்றையதினம் யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் 500 கிலோ கிராம் மஞ்சள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவால் குறித்த மஞ்சள் கைப்பற்றப்பட்டதுடன் 25 வயதான சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்டு கைமாற்றும் போதே கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைதான சந்தேக நபரை ஊர்காவாற்துறை பொலிஸார் ஊடாக ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் கோதெரிவித்துள்ளனர்.