உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விசேட அறிவித்தல்..!
[2025-04-30 11:11:11] Views:[100] 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் அடுத்த மாதம் 3 ஆம் திதிதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைய வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வ்ரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வீடு வீடாகச் சென்று வாக்குச் சீட்டு விநியோகிக்கும் பணி நிறைவடைந்ததாகவும், இதுவரை அதிகாரபூர்வ வாக்குச் சீட்டுகளைப் பெறாத எவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ள பகுதியில் உள்ள தபால் நிலையத்திற்குச் சென்று அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், அதிகாரபூர்வ வாக்காளர் அட்டை சுமார் தொண்ணூற்றைந்து சதவீதம் விநியோகிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொருத்தமான சின்னத்தை விரல் வண்ணம் தீட்டுதலுக்க சுண்டு விரலைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.