நாகை - காங்கேசன்துறை கப்பல் சேவை - கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[2025-05-01 15:34:16] Views:[102] நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் சிவகங்கை பயணிகள் கப்பல் சேவையின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று (01) செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன் துறைக்கு சுபம் நிறுவனத்தின் சார்பில் சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகின்றது.வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து ஆறு நாட்கள் இயக்கப்பட்டு வரும் கப்பல் சேவையில் இரு நாட்டு பயணிகளும் பயன் பெற்று வருகின்றனர். நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கடந்த ஒகஸ்ட் மாதம் முதல் சிவகங்கை கப்பல் சேவை இயக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய நிறுவன தலைவர், அதில் கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளை கவரும் விதமாக தற்போது 8,500 ரூபாயாக உள்ள சென்று வருவதற்கான கட்டணம் 8000 ரூபாவாக குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.